கத்தாரில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிய நாட்டவர் அதிகாரிகளால் கைது!

கத்தாரில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  தொழிலாளர்கள் கூடும் பகுதியில் சூதாட்டத்தில்  ஈடுபட்ட குறித்த நபர் ஆசிய நாட்டவர் என்பதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு நபர் சூதாட்டத்தில் ஈடுபடும் வீடியோ வைரலாக பரவியதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்த்து, தேவையான விசாரணைகளுக்குப் பிறகு, குற்றவாளியை கைது செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளர். அத்துடன் அவர் மேலதிக நட்ட நடவடிக்கைகளுக்கான நீதித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கத்தாரில் இது போன்று நடைபெறும் சூதாட்ட நிகழ்வுகள் பற்றி அறியக் கிடைத்தால் உடனடியாக Metrash2 செயலி மூலம் பாதுகாப்புத் துறைக்கு தகவல்களை வழங்கி, உரியவர்களை  கைது செய்ய ஒத்துழைக்குமாறு குற்றப் புலனாய்வுத் துறை பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: உலகில் குற்றச் செயல்கள் குறைந்த நகரங்கள் பட்டியல் 2022! கத்தாரின் டோஹா நகர் 2ம் இடத்தில்

Leave a Reply