கத்தாரில் இன்று (பெப்-12) முதல் திறந்த பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமில்லை

Mask no longer required in most outdoor settings from today

கத்தாரில் இன்று (பெப்-12) முதல் திறந்த பொது இடங்களில் முகக் கவசம் கட்டாயமில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் கடந்த புதன்கிழமை (09.02.2022) அன்று நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள், சந்தைகள், கண்காட்சி நடைபெறும் இடங்களில் முகக் கவசத்தை அணிந்து கொள்ளும் படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மூடிய பகுதிகளான, மசூதிகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள், மற்றும் பாடசாலைகள் போன்றவற்றில் தொடர்ந்து முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொது மக்களுடன் தொடர்பு கொள்ளும் அனைத்து வகையான பணியாளர்களும் (உ-ம்: உணவக ஊழியர்கள்) , முகக் கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது

திறந்த பொது வெளிகளில் முகக் கவசம் அணித்தேவையில்லை என்றாலும், எமது சுய பாதுகாப்புக்காக தொடர்ந்து முகக் கவசம் அணிந்து கொள்வது, எம்மையும், எம்மைச் சார்ந்தவர்களையும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என்பது கத்தார் தமிழின் ஆலோசனையாகும்.

இதையும் படிங்க: கத்தாரில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிய நாட்டவர் அதிகாரிகளால் கைது!

Leave a Reply