கத்தார் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பெப்ரவரி 8ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது!

Qatar announces National Sport Day holiday 2022
கத்தாரில் எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கத்தா நியுஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும், பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை கத்தாரின் தேசிய விளையாட்டு தினமாக (National Sports Day) கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அத்தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமீரி திவான் தெரிவித்துள்ளது.
 
கத்தாரில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்  நிலவி வரும் நிலையில், தேசிய விளையாட்டு  நிகழ்வுகள் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
கத்தார் வாழ் அனைவரும் இனிய விளையாட்டு தின வாழ்த்துக்கள்

Leave a Reply