Qatar Tamil NewsSports

கத்தார் 2022 பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்கான 6வது மைதானம் இன்று அங்குரார்ப்பணம்!

கத்தாரில் நடைபெறவுள்ள 2022 பீபா கால்ப்பந்து கிண்ணத்திற்கான 6வது மைதானம் இன்று (22.10.2021) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கத்தாரில் வருடாந்தம் நடைபெற்று வரும் உள்ளக கழகங்களுக்கிடையிலான போட்டிகள் Emir Cup என்பதாக அழைக்கப்படுகின்றன. மேற்படி போட்டி 1772ம் ஆண்டு முதல் விளையாடப்பட்டு வருகின்றன. 2021ம் ஆண்டுக்கான இன்றைய இறுதிப் போட்டியில் நடப்புச் செம்பியனாக இருக்கும்,  Al Sadd அணியும் அதனை எதிர்த்து Al Rayyan அணியும் மோதவுள்ளன.

மேற்படி Emir Cup இறுதிப்போட்டிகள் இன்று மாலை கத்தார் நேரப்படி 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன. 2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெறவுள்ள பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள 6வது மைதானமான அல் – துமாமா விளையாட்டரங்கிலேயே இப்போட்டி நிகழ்ச்சியானது நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தை கத்தார் அதிபர் தமீம் பின் ஹமத் அல்தானி அவர்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்கள்.

40 ஆயிரம் ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து போட்டி நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் வகையில் அல் – துமாமா மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்திற்காக கத்தார் 8 மைதானங்களை நிர்மாணித்து வருகின்றது. அதில் 5 மைதானப் பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டுள்ளன. 6வது மைதானமான அல் – துமாமா இன்று திறக்கப்படுவதோடு மீதமாகவுள்ள இரு மைதானங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளதாக கத்தார் கால்ப்பந்து உலகக் கிண்ண மைதான நிர்மாணப் பணிகளை கண்காணிக்கும் Supreme Committee for Delivery & Legacy தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள மைதானங்கள்

1. Al Bayt Stadium
2. Al Janoub Stadium
3. Al Rayyan Stadium ர
4. Khalifa International Stadium
5. Education City Stadium
6. Al Thumama Stadium (today)

நிர்மாணிக்கப்பட்டு வரும் இரு மைதானங்கள்

7. Ras Abu Aboud Stadium
8. Lusail Stadium

இதையும் படிங்க : கத்தார் விமான நிலையத்தில் அத்தையை வழியனுப்ப பாதுகாப்பு அதிகாரியிடம் மழலை மொழியில் அனுமதி கேட்ட குழந்தை (VIDEO)

Related Articles

Leave a Reply

Back to top button
%d bloggers like this: