காபூல் விமான நிலையம் திறக்கப்பட்டது, கத்தாரிலிருந்து தினமும் உதவிப் பொருட்களுடன் விமானம்!

Qatar Airways

காபூல் சர்வதேச விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளதாக ஆப்கனுக்கான கத்தார் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து கடைசி அமெரிக்கப் படைகளும் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியேறிவிட நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. விமான நிலையம் இனி இயக்கப்படுமா? மக்கள் போக்குவரத்து அனுமதிக்கப்படுமா? சர்வதேச அமைப்புகளின் உதவிகள் ஆப்கன் மக்களுக்குச் சென்று சேருமா என்றெல்லாம் கேள்வி எழுந்தது. இந்நிலையில், காபூல் விமான நிலையம் சர்வதேச உதவிகளைப் பெறுமளவிற்கு தயாராகிவிட்டதாக கத்தார் தூதர் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் உள்ள சில தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உதவியுடன் ஓடுதளம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் தூதர் தெரிவித்தார்.

காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து கத்தார் மத்தியஸ்தம் செய்து வருகிறது. முன்னதாக, இது தொடர்பாக கத்தார் வெளியுறவு அமைச்சர் அல் தானி, பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். காபூல் விமான நிலையத்தை மீண்டும் இயக்குவது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த சில நாட்களில் நல்ல செய்தியைக் கேட்பீர்கள் என்று அல்தானி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கத்தாரிலிரந்து தினந்தோறும் உதவிப் பொருட்களுடன் விமானங்கள் காபூல் விமான நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கத்தார் தெரிவித்துள்ளது. இந்த உதவிப் பொருட்களில் மருப்துப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்களும் அடங்கியுள்ளதாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : துபாயில் கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

Leave a Reply