துபாயில் கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

Four men rewarded Rs 40 lakh for rescue of pregnant cat in Dubai

துபாயில் கப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றிய நான்கு பேருக்கு தலா 10 லட்சம் வீதம் 40 லட்ச ரூபாய் துபாய் ஆட்சியாளர் மூலம் பரிசாக கிடைத்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் துபாய் தேரா அல் மாரார் பகுதியில் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் ஆட்கள் செல்ல முடியாத பகுதியில் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியாமல் கர்ப்பிணிப் பூனை ஒன்று சிக்கித் தவித்தது.

எப்படியாவது உயிர் தப்ப போராடிய அந்த பூணையை துபாயில் பணிபுரியும் கேரள மாநிலத்தை சேர்ந்த கோழிக்கோடு வடகரை புரமேரியைச் சேர்ந்த அப்துல் ரஷீத், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆர்டிஏ டிரைவர் நசீர் முகமது, மொராக்கோவைச் சேர்ந்த அஷ்ரப் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அதிஃப் மஹ்மூத் ஆகியோர் கீழே நின்றவாறு ஒரு துணியை பரப்பிப் பிடித்து பூனை கீழே தாவி வரும் வரை நின்றனர்.

அப்போது சரியாக துணியில் விழுந்த பூனை காயமின்றி தப்பியது. இந்த சம்பவம் ரஷித்தின் கேமராவில் பதிவாகியது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டசில மணிநேரங்களில் வைரலானது.

இந்த வீடியோவைப் பார்த்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துபாயின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சமூக வலைதளத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு காப்பாற்றிய நால்வருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

மேலும் “எங்கள் அழகான நகரத்தில் நல்ல வேலையைப் பார்த்தற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம். இந்த நாயகர்கள் நால்வரையும் நாம் கொண்டாட வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமை இரவு, அந்த நான்கு பேரும் தங்கியிருந்த பகுதிக்கு அதிகாரிகள் குழு நேரில் வந்து அவர்களுக்கு தலா 50000 திர்ஹம் வீதம் 2 லட்சம் திர்ஹம் இதிய ரூபாயில் 40 லட்சம்) பரிசாக வழங்கினர்.

அப்போது அவர்கள் இது துபாய் ஆட்சியாளரிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்குரிய பரிசு என தெரிவித்தனர்.

இதற்கிடையே உயிர் பிழைத்த பூனைக்கு காயம் எதுவும் இல்லை என்றபோதிலும் அதிகாரிகள் அந்த பூனையை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர் (Thanks to inneram)

இதையும் படிங்க : கத்தாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி ஐவர் பலி!

Leave a Reply