Qatar Tamil NewsSaudi News
சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சர் கத்தார் வந்தடைந்தார்!

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சர் அப்துல் அஸீஸ் பின் சவுதி பின் நய்ப் அப்துல் அஸீஸ் பின் சவூத் அவர்கள் இன்று (சனிக்கிழமை) கத்தார் வந்தடைந்துள்ளதாக கத்தார் நிவ்ஸ் ஏஜென்ஸி (QNA) செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கத்தார் வருகை தந்த அமைச்சரை கத்தாரின் பிரதமரும், உள்துறை அமைச்சருவமான அஷ்ஷெய்க அப்துல் அஸீஸ் அல்தானி அவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்றார்.
கத்தாருக்கும், சவுதிக்கும் இடையில் ஏற்பட்டிருந்த இராஜ தந்திர உறவு முறிவு மீள ஆரம்பிக்கப்பட்ட பின்னர் சவுதியின் உயர் பதவியில் உள்ள ஒருவர் கத்தாருக்கு பயணிப்பது இதுவே முதல தடவையாகும்.
இதையும் படிங்க : துபாயில் கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO