நடு வீதியில் ஓட்டப்பந்தயம் நடத்திய சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்த கத்தார் பாதுகாப்பு அதிகாரிகள்!

Qatar Traffic police seize two vehicles for road racing

கத்தாரின் வீதியொன்றில் ஓட்டப்பந்தயம் நடத்திய சொகுசு வாகனங்களை பறிமுதல் செய்த கத்தார் பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

Toyota Land Cruiser and a Nissan Patrol போன்ற இரண்டு வாகனங்கள் ஒன்றையொன்று முந்திக் கொண்டு ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று கத்தாரின் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து பாதுகாப்புத் துறை நடத்திய தோடுதல் வேட்டையில், மேற்படி இரு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இரு வாகன ஓட்டுநர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைள் எடுக்கப்படும் என்பதாக தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை, வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றும் படியும், மீறும் பட்சத்தில் சட்டத்தின் பிடியில் சிக்க வேண்டி ஏற்படும் என்பதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிங்க : துபாயில் கர்ப்பிணிப் பூனையின் உயிரைக் காப்பாற்றியவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு – VIEDO

Leave a Reply