கத்தாரில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி ஐவர் பலி!

Qatar Road Accident

கத்தாரில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் சிக்கி ஐவர் பலியாகியுள்ள சோகச் சம்பவம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 30 திகதி பதிவாகியுள்ளது. பாதுகாப்புத் துறை தனியார் நிறுவனமொன்றில் பணியும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி, கணரக வாகனம் ஒன்றுடன் மேதுண்டதனால் இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் ஐரோப்பிய நிறுவனமான European Guarding & Security Services பணியாற்றிய 3 கென்யாவைச் சேர்ந்தவர்கள் ஒரு நோபாளியும், உகன்டாவைச் சேர்ந்த ஒருவரும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் சிக்கிய ஏனையவர்கள் ஹமத் வைத்திசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்தில் சிக்கி பலியானவர்களின் உடல்களை தாயகம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் கத்தாரில் அமைந்துள்ள கென்ய தூதரகம் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க – கத்தாரில் பருவகால காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் பணிகள் செப்-01 முதல் ஆரம்பம்!

Leave a Reply