கத்தாரில் பருவகால காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் பணிகள் செப்-01 முதல் ஆரம்பம்!

Dr. Abdullatif Al Khal

கத்தாரில் பருவகால காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் பணிகள் செப்டம்பர் மாதம்-01 (நேற்று) முதல் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தார் ஹமத் வைத்தியசாலையிலும், கத்தார் முழுதும் அமைந்துள்ள 45ற்றும் அதிகமான ஆரம்பத் மருத்துவ கழகங்களிலும் இந்த தடுப்பூசிகளை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக கத்தார் ஹமத் வைத்தியசாலை தொற்றுநோய்பிரிவு பொறுப்பாளர் Dr. Abdullatif Al Khal அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பருவ கால மாற்றங்களின் போது ஏற்படும் காய்ச்சலைத் தடுக்கவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும், பொதுவாக செப்டம்பர் மாத இறுதிப்பகுதியில் தான் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிப்பது வழக்கமாகும். என்றாலும் தற்போது கத்தாரில் நிலவும் கொரோனா நிலைமையினால் பருவகால காய்ச்சல் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் செம்டம்பர் மாத ஆரம்பத்திலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைமை வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை கத்தாரில் கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவாகப் பெற்றுக்கொள்ளும் படியும், கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் பெற்று சிறிது காலத்தின் பின்னர் பருவகால காய்ச்சல் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு Dr. Abdullatif Al Khal அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் ON ARRIVAL VISA நாடுகளின் பட்டியல் 83 ஆக அதிகரிப்பு!

Leave a Reply