ஹஜ்ஜுப் பெருநாள் தினங்களில் கத்தார் முழுதும் அதிகளவு பொலிஸார் ரோந்துப் பணியில்!

கத்தாரில் நாளை கொண்டாடப்படவுள்ள  ஹஜ்ஜுப் பொருநாளை முன்னிட்டு நாடு முழுதும் அதிகளவு பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கத்தார் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

பெருநாள் தினங்களில் பொதுவாக வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பதனால், சீரான போக்குவரத்தை ஏற்படுத்துவற்காக மேலுதிக பொலிஸார் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு ரோந்துப் பணிகள் நடைபெறவுள்ளன.

குறிப்பாக பெருநாள் தொழுகை நடைபெறும் மசூதிகள், பெருநாள் தொழுகை மைதானங்கள், குர்பான் பிராணிகள் அறுக்கப்படும் இடங்கள், வர்த்தக கட்டிடங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற பகுதிகளில் அதிகளவு பாதுகாப்பு அதிகாரிகள் உலாவருவார்கள் என்பதாக கத்தார் போக்குவரத்துறைப் உதவி தலைமை அதிகாரி Colonel Jaber Mohamed Rashid Odaiba, அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

போக்குவரத்து விதி மீறல்களைப் கண்காணிக்க கெமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு கெமராக்கள் மூலம் துள்ளியமாண வீடியோக்கள், மற்றும் படங்கள் எடுக்கப்படுகின்றன. இவ்வாறு போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உரிய அபராதங்கள் விதிக்கப்படும். அத்துடன் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றாதவர்களும் கெமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்பதாக போக்குவரத்துறைப் உதவி தலைமை அதிகாரி Colonel Jaber Mohamed Rashid Odaiba, அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் ஹஜ்ஜுப் பொருநாள் தொழுகை காலை 5.10க்கு நடைபெறும் – அவ்காப் அறிவிப்பு!

Leave a Reply