கத்தார் அதிபர் கலந்து கொண்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை! (படங்கள்)

புனித ஹஜ்ஜுப் பெருநாள் இன்று காலை கத்தார் முழுதும் நடைபெற்றுள்ளது. கத்தார் அதிபர் HH Sheikh Tamim bin Hamad Al-Thani  அவர்கள் தனது பெருநாள் தொழுகையை வஜ்பா மைதானங்களில் நிறைவேற்றினார்.

மேலும் கத்தாரில் 924 மசூதிகளும், மைதானங்களும் தொழுகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மைதானங்கள், மற்றும் மசூதிகளில் சமூக இடைவெளிகளைப் பேணி, கொரோனா முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றி தொழுகைகள் நடைபெற்றது.

அத்துடன் போக்குவரத்தை சீர்செய்வதற்காக நாடு முழுதும் விசேட பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கத்தார் போக்குவரத்து துறை ஆணையும் தெரிவித்துள்ளது.

கத்தார் அதிபர் கலந்து கொண்ட பெருநாள் தொழுகைப் பாடங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply