கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறவுள்ள மைதானங்கள் & மசூதிகள் பட்டியல்

Awqaf announces list of mosques and prayer grounds for Eid Al Fitr Prayer

எதிர்வரும் ஜுலை 20ம் திகதி கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெறவுள்ள மைதானங்கள் & மசூதிகள் பட்டியலை இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு ”அவ்காப்” வெளியிட்டுள்ளது.

நாடு தழுவிய ரீதியில் 924 மசூதிகளும், அத்துடன் மைதானங்களும் தொழுகைக்காக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும், மேற்படி மசூதிகள், மைதானங்களில் சுத்திகரிப்பு பணிகளில் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு ஈடுபட்டுள்ளதாக அவ்காப் தெரிவித்துள்ளது.

தொழுகைக்காக வருகைதருபவர்கள், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி வருவதோடு, சமூக இடைவெளிகளையும் முறையாகப் பேணிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கத்தாரில் பெருநாள் தொழுகை காலை 5.10க்கு ஆரம்கமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொழுகை நடைபெறவுள்ள மசூதிகள் & மைதானங்களின் பெயர் விபரங்களுக்கு – இங்கு செல்க!

Leave a Reply