தனது 10 வயது மகனை வெட்டிக் கொன்ற தந்தைக்கு சவுதியில் மரணதண்டனை நிறைவேற்றம்.

சவுதி அரேபியாவில் தனது 10 வயது மகனை பாடசாலையிலிருந்து ஆள் நடமாட்டமில்லாத இடம் ஒன்றிக்கு அழைத்துச் சென்று கத்தியால் குத்திக் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டிய தந்தை ஒருவருக்கு நேற்று (2021-06-01) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜிசான் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மத் பின் அப்துல்லாஹ் என்ற 40 வயது தந்தை ஒருவருக்கே நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சவுதி அரேபிய நீதிமன்றங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சவுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

சென்ற 2016ம் ஆண்டு தனது மாமாவினைக் கொலை செய்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட குறித்த நபர், கொலை செய்யப்பட்ட மாமாவின் குடும்பத்தாருக்கு இழப்பீட்டுத் தொகையினை வழங்க பணம் சேகரிப்பதற்காக நீதிமன்ற அனுமதியின் பெயரில் விடுவிக்கப்பட்டதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணம் சேகரிப்பதற்காக வெளியில் வந்தவர் நேரடியாக தனது மகன் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்று மகனை அழைத்துக் கொண்டு ஆள் நடமாட்டமில்லாத இடம் ஒன்றிக்குச் சென்று இக் கொடூர செயலைப் புரிந்துள்ளார். மேலும் இவர் தனது மகளையும் கொலை செய்யும் திட்டத்தில் இருந்ததாக விசாரனையில் தெரிய வந்துள்ளது.

இவரது கொலைக்கான காரணங்கள் தொடர்பில் தெளிவான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

செய்தி மூலம் – https://gulfnews.com
தமிழில் – சம்மாந்துறை அன்சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *