கத்தாரில் வசிப்போருக்கு இணைய ஊழல்கள், மோசடிகள் பற்றி MOIயின் எச்சரிக்கை

கத்தாரில் இணைய வழி மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் கத்தார் உள்துறை அமைச்சானது கத்தாரில் வசிப்போருக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இணைய ஊழல்கள் மற்றும் மோசடிகள்

தற்போது இலத்திரனியல் பரிவர்த்தனைகளின் பயன்பாடுகள் அதிகரித்துள்ளதினால், இணைய ஊழல்கள் மற்றும் மோசடிகளால் உங்களைப் பாதுகாப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை கடைபிடிக்க உங்களுக்கு அறிவுறுத்திறோம். என்பதாக கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

உங்களது தொலைபேசிக்கு SMS மூலம் நீங்கள் பெறும் OTP (One Time Password)ஐ எந்த காரணத்திற்காகவும் மற்றவர்களுடன் பகிர்வதைத் தவிர்க்கவும்.

எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்னா் உங்களுக்கு வரும் அழைப்புக்கள் மற்றும் செய்திகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளவும்.

2347444, மற்றும் மின்னஞ்சல் cccc@moi.gov.qa ஆகியவற்றின் மூலம் சைபர் பாதுகாப்பு தடுப்பு குழுமை அணுகி மோசடி நடவடிக்கை குறித்த முழுமையான தகவல்களை வழங்கவும்.

மேற்படி நடவடிக்கைகள் குறித்து உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுககு தெரியப்படுத்தி
அவர்களுக்கு அறிவூட்டும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply