நாம் இருவர், நமக்கு மூவர், சீனர்கள் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி!

தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள சீனா அனுமதித்துள்ளது. சீனாவில், கடந்த 1979 ஆம் ஆண்டு முதல், தம்பதிகள், ஒரு குழந்தையை மாத்திரம் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கொள்கை நடைமுறையானது.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டில் அந்தக் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்த சீன அரசாங்கம், தம்பதிகள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளித்தது.

எவ்வாறிருப்பினும், சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளில், பிறப்பு வீதம் செங்குததான சரிவைக் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வருடாந்த பிறப்புகள் 2020 ஆம் ஆண்டில், தொடர்ந்து 12 மில்லியனாக குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிவர பணியகம் கடந்த மாதம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அனுமதித்து சீன அரசாங்கம் அறிவித்துள்ளதாக அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply