இலங்கையில் கொரோனா அச்சத்தால் மூடப்பட விமான நிலையம் ஜுன் 01ம் திகதி முதல் திறக்கப்படும்

நாட்டில் அனைத்து விமான நிலையங்களும் நாளை (01) முதல் மீள திறக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக்க தெரிவித்தார்.

நாட்டில் கொவிட் பரவல் நிலையை கருத்திற்கொண்டு வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு இன்று நள்ளிரவு வரை தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து விமான நிலையத்தின் வருகை தரு முனையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையில் நாளை முதல் வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு அனைத்து விமான நிலையங்களையும் மீள திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இலங்கை வரும் விமானமொன்றில் வரக்கூடிய ஆகக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை 75 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply