2024ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமானச் சேவையாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவு செய்யப்பட்டது

Qatar Airways named as Best Airlines of the Year 2024

2024ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமானச்சேவையாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

விமானங்களை தரப்படுத்தும் AirlineRatings.com தளத்தின் தரப்படுத்தல் மூலம் கத்தார் ஏர்வெய்ஸ் உலகின் சிறந்த விமானச்சேவையாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, கத்தார் ஏர்வேஸ் சிறந்த வணிக வகுப்பு மற்றும் சிறந்த கேட்டரிங் சேவைகளை வழங்கும் விமானச் சேவையாகவும், பட்டங்களையும் பெற்றுள்ளது.

இந்த தெரிவு தொடர்பாக AirlineRatings.com இன் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி தாமஸ் கருத்து தெரிவிக்கும் போது,  கத்தார் ஏர்வேஸின் வெற்றிக்குக் காரணம், பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் அதன் நிலைத்தன்மை மற்றும் தரமான சேவை வழங்கல் ஆகும் என்றார்.

“எங்கள் புறநிலை பகுப்பாய்வில் கத்தார் ஏர்வேஸ் பல முக்கிய பகுதிகளில் முதலிடத்தைப் பிடித்தது, இருப்பினும் இது முதல் பத்து இடங்களுக்கு மிக நெருக்கமான மதிப்பெண்களைப் பெற்றது. “எவ்வாறாயினும், பயணிகள் மதிப்புரைகள்கத்தார் ஏர்வேஸ் அனைத்து விமான நிறுவனங்களை விடவும் முதன்மை பெற காரணமாக அமைந்தது. மேலும் அதன் நிலைத்தன்மை மற்றும் உயர் தரமான சேவை வழங்கல் ஆகியவை அதனை முதன்மை நிலை பெற வைத்துள்ளன.

2024ம் ஆண்டுக்கான சிறந்த விமானச் சேவைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள 25 விமானச்சேவைகள் வருமாறு.

 1.  Qatar Airways
 2. Korean Air
 3. Cathay Pacific Airways
 4. Air New Zealand
 5. Emirates
 6. Air France/ KLM
 7. All Nippon Airways
 8. Etihad Airways
 9. Qantas
 10. Virgin Australia/Atlantic
 11. Vietnam Airlines
 12. Singapore Airlines
 13. EVA Air,
 14. AP Portugal
 15.  JAL
 16. Finnair
 17. Hawaiian
 18. Alaska Airlines
 19. Lufthansa / Swiss
 20. Turkish Airlines
 21. IGA Group (British Airways & Iberia)
 22. Air Canada
 23. Delta Air Lines
 24. United Airlines
 25. American Airlines.

Also Read: கத்தாரில் இந்த வாரம் பலத்த காற்றுடன் கூடிய தூசி நிறைந்த சூழல் காணப்படும் – கத்தார் வானிலை ஆய்வு மையம் தகவல்

Leave a Reply