கத்தாரில் கடும் சூடு! ஜுன்-1 முதல் 10.00 – 3.30 மணி வரை பொது வெளியில் பணியமர்த்த தடை!

Qatar bans outdoor work from 1st of June till 15th of Septermber
கத்தாரில் தற்போது கடும் சூட்டுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றமையினால் காலை 10.00 மணி முதல் நன்பகல் 3.30 வரை திறந்த வெளிகளில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. ஜுன் மாதம் 1ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 15ம் திகதி வரை கத்தாரில் கடும் வெப்பம் நிலவுவதனால் பணியாளர்களின் ஆரோக்கியம் கருதி கத்தார் இந்த சட்டத்தை இயற்றியுள்ளது.
இது போன்ற சூடு நிலவும் காலங்களில் களப்பணியாளர்களுக்கான களைப்பாறுவதற்கான இடங்கள், மற்றும் குளிர் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பாகும் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
களப் பணியாளர்களைப் பொறுத்தவரை 8 மணி நேரங்களில் பணி புரிபவர்களாக இருந்தால் காலையில் 5 மணித்தியாலங்களும் ஏனைய 3 நேரங்கள் மாலையில் என்ற அடிப்படையில் அமைய வேண்டும் என்பதாக அமைச்சு தெளிவு படுத்தியுள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள் இந்த சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துகின்றனவா? என்பதை கண்காணிக்க அதிகாரிகள் கள விஜயங்களை மேற்கொள்வார்கள் என்பதாகவும், மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதாகவும் கத்தார் தொழிலாளர் விவகார அமைச்சு விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Qatar bans outdoor work from 1st of June till 15th of Septermber

Leave a Reply