கத்தாரில் மார்ச் 7ம் திகதி வரை மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம் தகவல்

Qatar Meteorology forecasts rain from Thursday

இன்று முதல் எதிர்வரும் 7ம் திகதி வரை கத்தாரில் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கத்தார் வானிலை ஆய்வுத் துறையின் சமீபத்திய வானிலை தொடர்பான இற்றைப்படுத்தலில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில், வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும், மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு  கத்தார் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.

Also Read: கத்தாரில் மார்ச் 11ம் திகதி முதல் நோன்பு தினமாக இருக்கும் – Qatar Calendar House

Leave a Reply