புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 900க்கு மேற்பட்ட உணவுப் பொருட்களின் விலையை குறைத்தது கத்தார் அரசு!

Prices of over 900 items reduced for Ramadan

Prices of over 900 items reduced for Ramadan

எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் புனித ரமழான் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் கத்தார் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 900க்கு மேற்பட்ட பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை கடந்த வருடம் போன்று இந்த வருடமும் அறிவித்துள்ளது.

மார்ச் மாதம் 4ம் திகதி முதல் ரமழான் மாதம் இறுதிவரை கத்தார் வாழ் மக்கள் இந்த சலுகையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த விலை கட்டுபட்டு விலையில் பொருட்களை முன்னணி சூபர் மார்க்கட்டுகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
 
இந்த கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றனவா என்பதை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு அதிகாரிகள் அடிக்கடி பரிசோதனை செய்வார்கள் என்பதாக கத்தார் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருட் பட்டியல்  – இங்கு கிளிக் செய்க

Leave a Reply