புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பளித்த கத்தார் அதிபர்

qatar amir pardons prisoners on the occasion of ramadan 2024

கத்தாரில் சிறு குற்றங்களினால் சிறையில் வாடுவோருக்கு பொதுமன்னிப்பளிக்க கத்தார் அமீர்  தமீம் பின் ஹமத் பின் அல்தானி அவர்கள் தீர்மானித்துள்ளதாக கத்தார் தேசிய செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

2024ம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு இவ்வாறு சிறு குற்றம் புரிந்த சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களுக்கு விடுதலை வழங்கப்படவுள்ளதாக கத்தாரின் தேசிய செய்திச் சேவை (QNA) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் எத்தனை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதாக தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Also Read: கத்தாரில் ரமழான் பிறை தென்பட்டது – நாளை (திங்கட்கிழமை) முதல் நோன்பு ஆரம்பம்

Leave a Reply