கத்தாரில் சாரதிகளாக பணிபுரிவோர் கவனத்திற்கு! உள்துறை அமைச்சு விடுக்கும் செய்தி!

tips for driving in foggy weather in qatar
கத்தாரில் தற்போது நிலவும் குளிர் நிலைமை காரணமாக காலை வேளையில் தொடா் பனிமூட்டமான காலைநிலை ஏற்பட்டு வருகின்றது. அந்த வகையில் வானிலை அவதான நிலையம் மற்றும் உள்துறை அமைச்சு போன்றவை கத்தாரில் சாரதிகளாக தொழில் புரியும், மற்றும் வாகன உரிமையாளா்களுக்கு கீழ்வரும் குறிப்புகளை வழங்கியுள்ளது.
1. சாதாரண நேரங்களில் வாகனம் செலுத்தும் போது வானங்களுக்கு இடையில் வழங்கும் இடைவெளிகளை விட அதிக இடைவெளிகளை வழங்கவும்.
 
2. உங்களுக்கு முன்னால் செல்லுகின்ற வாகனங்களை ஓவா்டேக் பன்னும் விடயத்தில் கடும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். ஓவர்டேக் பன்னுவதற்கான சரியான இடைவெளி, பாதுகாப்பான நிலைமை இருந்தால் மட்டும் எச்சரிக்கையுடன் முந்துங்கள்.
 
3. பல டிரக்கள் உள்ள பாதைகளில் வாகனம் செலுத்தும் போது தொடா்ந்து உங்களது டிரக்கில் மட்டும் செல்லுங்கள். சடுதியாக டிரக்களை மாற்ற வேண்டாம்.
4. மிக அடா்த்தியான மூடுபனி நிலைமை தொடர்ந்தால் பாதையை விட்டு விலகி, வாகன நெறிசல் ஏற்படாத வகையில் பார்க் செய்து வைக்கத் தயங்க வேண்டாம்.
 
5. மிக முக்கிமாக வாகனங்களை செலுத்தும் போது hazard lights களை ஒளிர விட வேண்டாம். அதற்கு பதிலாக fog lights or low beam lights களைப் பாவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்டுகின்றனா்.

Leave a Reply