Qatar Tamil News
வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ள கத்தாரின் வெப்பநிலை, குளிர் காலம் ஆரம்பம் – QMD தகவல்

கத்தாரின் வெப்பநிலையானது வீழ்ச்சியடைந்து வருவதாகவும், விரைவில் குளிர் காலம் ஆரம்பிக்கும் எனவும் கத்தாரின் வானிலை அவதான நிலையம் (QMD) தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் கத்தாரில் மழையுடன் கூடிய கால நிலை நிலவக் கூடும் என QMD தெரிவித்துள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் கத்தாரின் நாளாந்த வெப்பநிலையானது 24.8 பாகையாக இருக்கும் எனவும் கத்தாரின் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கத்தார் வரலாற்றில் குறைந்த வெப்ப நிலையாக 1963ம் ஆண்டு 11.3 பாகை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சாரதிகள் கவனத்திற்கு :- டோஹாவில் தற்காலிகமாக மூடப்படும் எரிபொருள் விற்பனை நிலையம்!