Qatar Tamil News

சாரதிகள் கவனத்திற்கு :- டோஹாவில் தற்காலிகமாக மூடப்படும் எரிபொருள் விற்பனை நிலையம்!

கத்தாரின் டோஹா நகரில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையம் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோஹா நகரின் Msheirebயில் அமைந்துள்ள எரிபொருள் விற்பனை நிலையமே இவ்வாறு மூடப்படவுள்ளது. எரிபொருள் விற்பனையுடன் சேர்த்து மேற்படி நிலையத்தினால் வழங்கப்பட்டு வந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளன.

இந்த Msheireb எரிபொருள்நிரப்பு நிலையமானது எதிர்வரும் 3ம் திகதி முதல் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டிருக்கும் என்பதாகவும், வாகன உரிமையாளர்கள், Old Al Ghanim, Old Slata and Fareej Bin Dirham போன்ற இடங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களை பாவிக்க முடியும் என்பதாக கத்தார் வகூத் டுவிட்டுர் மூலமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கத்தாரில் நடைபெறவுள்ள திரைப்பட விழா – வாகனங்களில் அமர்ந்த படி கண்டுகளிக்கும் வசதி!

Related Articles

Leave a Reply

Back to top button
%d