கத்தாரில் நாளை முதல் வார இறுதி வரை மூடுபனிக் காலநிலை தொடரும்!

fog to affect visibility from tomorrow until weekend in Qatar

கத்தாரில் நாளை முதல் வார இறுதி வரை மூடுபனிக் காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

நாளை டிசம்பர் 5 ஆம் திகதி முதல் வார இறுதி வரை இரவு மற்றும் அதிகாலை வேளையில் நாட்டின் சில இடங்களில் பனிமூட்டமான காலநிலை நிலவும் என்பதாக கத்தார் வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த வானிலையின் போது அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு QMD கேட்டுக் கொண்டுள்ளது. என்றாலும் திணைக்களத்தினால் இதுவரையில் மேலதிக எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலத்தில் விற்க உள்துறை அமைச்சு நடவடிக்கை!

Leave a Reply