கூடைப்பந்து உலகக் கோப்பை 2027ஐ நடத்த தேர்வாகியது கத்தார்!

Qatar Selected to host Basketball World Cup 2027

2027ம் ஆண்டுக்கான கூடைப்பந்து உலகக் கோப்பை நடத்த கத்தார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கத்தார் கூடைப்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது..

சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு (FIBA – International Basketball Federation) இந்த அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி போட்டி 2027ம் ஆண்டு கத்தாரின் டோஹா நகரில் நடைபெறும் எனவும், அதில் 32 பங்கு பற்றும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் சிறந்த இணைக்கப்பட்ட இடங்களுள் ஒன்றான கத்தாரின் தலைநகரான தோஹா, பங்கேற்கும் பெரும்பாலான நாடுகளிலிருந்து நேரடி விமானங்களைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பொதுப் போக்குவரத்து நெட்வொர்க் அனைத்து இடங்களையும் இணைக்கிறது, இதனால் அனைத்து பார்வையாளர்களுக்கும் உயர்தர சேவையை வழங்கும் என்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

1950 சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பினால் முதலாவது கூடைப்பந்து உலகக் கோப்பை நடத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் 4 வருடங்களுக்கு ஒரு முறை இந்த கூடைப்பந்து உலகக் கோப்பையானது நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் (2023) 19வது கூடைப்பந்து உலகக் கோப்பையானது ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகளில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 10 திகதி வரை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வரிசையின் 2027ம் ஆண்டு 20 கூடைப்பந்து உலகக் கோப்பையை நடத்தவே தற்போது கத்தார் உத்தியோக பூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கத்தாரில் தங்கி வேலை தேடுபவரா நீங்கள்? Al Meeraவில் பதவி வெற்றிடங்கள்!

 

Leave a Reply