Qatar Tamil News

தர்பூசணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 90 கிலோ போதைப் பொருட்கள் கத்தார் சுங்கத்தினால் பறிமுதல்

தர்பூசணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 90 கிலே போதைப் பொருட்கள் கத்தார் சுங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால், சுங்கத் துறையின் பொது ஆணையத்தின் ஒத்துழைப்புடன் இந்த பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கத்தார் சுங்கம் செய்தி வெளியிட்டுள்ளது.

“சில ஆப்பிரிக்க உட்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்கள் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டனர்” என்று உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமான பொருட்களை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதிராக சுங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகளின் உடல் மொழியைப் படிக்கவும், கடத்தல்காரர்கள் பின்பற்றும் சமீபத்திய முறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், புதிய தொழில்நுட்ப சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: கூடைப்பந்து உலகக் கோப்பை 2027ஐ நடத்த தேர்வாகியது கத்தார்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button