100 சதவீதம் இலத்திரணியல் மயப்படுத்தப்படும் கத்தார் – சவுதி எல்லை!

Abu Samra border to become 100% electronic

Abu Samra border to become 100% electronic

கத்தார் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து பாலமாக விளங்கும் ஒரேயொரு பாதையான சல்வா வீதியில் அமைந்துள்ள எல்லை சோதனைச் சாவடியானது 100க்கு 100 வீதம் இலத்திரணியல் மயப்படுத்தப்படவுள்ளதாக கத்தார் தெரிவித்துள்ளது.

கத்தாரின் வானொலியொன்றுக்கு பயணிகள் பிரிவின் தலைவர் Abdullah Al Jaber அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இந்த இலத்திரணியல் மயமாக்கும் திட்டமானது 107,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு உதவியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

கத்தாருக்கும், சவுதிக்கும் இடையிலான இந்தப் பாதையினூடாக கடந்த நோன்புப் பொருநாள் தினத்தில் மாத்திரம் 376,500 வாகனங்கள் எல்லையை கடந்துள்ளன.

இந்த நடைமுறையான வாகனங்களின் இன்சுரன்ஸ்ஈ பாதுகாப்பு விடங்களுக்கு உதவும் என்பதோடு வாகனங்களை விரைவாக பரிசோதனை செய்து உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என்பதாக பயணிகள் பிரிவின் தலைவர் Abdullah Al Jaber அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: தர்பூசணிக்குள் மறைத்து கடத்தப்பட்ட 90 கிலோ போதைப் பொருட்கள் கத்தார் சுங்கத்தினால் பறிமுதல்

Leave a Reply