கத்தாரில் நோன்புப் பெருநாள் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டன

qatar announced eid holiday for 2023
qatar announced eid holidayfor2023
2023ம் ஆண்டுக்கான ஈதுல் பித்ர் ( நோன்புப் பெருநாள்) விடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்பை கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அதன் படி அமைச்சகங்கள், அரச, மற்றும் பொது நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எதிர்வரும் ஏப்ரல் 19ம் திகதி முதல் 27ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ம் திகதி முதல் பணிக்கு திரும்புவார்கள்.
கத்தார் மத்தி வங்கியின் கீழ் இயங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறைகளை மத்திய வங்கியே தீர்மானிக்கும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் நிறுவனங்களைப் பொறுத்தவரை 3 நாட்கள் வழங்கப்படுவது வழமையாகும். அந்த விடுமுறை நாட்களை நிறுவனங்களே வரையறை செய்யும்.
அனைவருக்கும் முற்கூட்டிய இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

Leave a Reply