8000 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்து கத்தாரை வந்தடைந்த பிரான்ஸ் நண்பர்கள்! (VIDEO)

கத்தாரில் நவம்பர் மாதம்  20ம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், போட்டி நிகழ்ச்சிகளை காண ரசிகர்கள் கத்தாருக்கு விரைந்த வண்ணம் உள்ளனர். என்றாலும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இரண்டு நண்பர்கள் நாங்கள் சைக்கிளில் பயணம் செய்து தான் கத்தாரை அடைவோம் என்று  கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி பிரான்ஸிலிருந்து தங்களது பயணத்தை ஆரம்பித்தார்கள்.

26 வயதான கேன் நகரைச் சேர்ந்த மெஹ்தி மற்றும் போர்டோக்ஸைச் சேர்ந்த கேப்ரியல் ஆகிய இருவரும் அந்த நண்பர்கள். பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, பின்னர் துருக்கி ஊடாக மத்திய கிழக்கில் நுழைந்த அவர்கள் இன்றைய தினம் (17.11.2022) கத்தாரை வந்தடைந்துள்ளனர்.

கால்ப்பந்து இறுதிப் போட்டி நடைபெறவுள்ள லுசைல் மைதானத்திற்கு முன்னார் நின்று எடுத்துக் கொண்ட படங்களை தங்களது டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

எட்டாயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் சைக்கிள் மூலமாக பயணித்து கத்தாரை வந்தடைந்த இரு நண்பர்களுக்கும், கால்ப்பந்து ரசிகர்கள் சார்பாக அமோக வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Also Read (முன்னைய பதிவு) : கத்தார் பீபா போட்டிகளைக் காண 8000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணிக்கும் நண்பர்கள்!

Leave a Reply