கத்தார் வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு! நாடு முழுதும் புதிய கண்காணிப்பு கேமராக்கள்!

நவம்பர் மாதம் 20 திகதி முதல் கத்தாரில் 22வது ஃபீபா கால்ப்பந்து உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாடுமுழுதும் புதிய கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக கத்தார் உள்துறை அமைச்சு இன்று (16.11.2022) அறிவித்துள்ளது.

கத்தாரில் குழுமியுள்ள கால்ப்பந்து ரசிகர்களினால் நெரிசல் ஏற்பட்டுள்ளதனால் சீரான போக்குவரத்து அனுபவத்தை வழங்க கத்தார் முழும் விசேட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக MOI தெரிவித்துள்ளது.

இந்த விசேட கேமராக்கள் மூலமாக வாகன ஓட்டுநர்கள் ஆசனப் பட்டிகள் அணியாமை, வாகனத்தை செலுத்தும் போது கைப்பேசி பாவித்தல், அதிகவேகம் போன்ற போக்குவரத்து மீறல்கள் துள்ளியமாக காண்காணிப்படவுள்ளது.

எனவே அனைத்து வாகன ஓட்டுநர்களும் போக்குவரத்து விதிகளை மீறி சீரான வாகனப் போக்குவரத்து வழிசெய்வதோடு, அபராதங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Also Read: ஃபீபா கால்ப்பந்து உலகக் கோப்பை – கத்தாரின் பண்ணிரெண்டு வருட உழைப்பின் பயன்!

Leave a Reply