கால்ப்பந்து உலகக் கோப்பை 2022 : அர்ஜென்டினாவுடனான போட்டியில் சவுதி அரேபியா அசத்தல் வெற்றி!

Saudi Arabia shocked Argentina with a stunning victory

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று லுசைல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா, சவுதி அரேபியா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்திய அர்ஜென்டினா அணியினர் மிக சிறப்பாக விளையாடி கோல் வாய்ப்புகளை உருவாக்கினர் .

ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய அணியின் கேப்டன் மெஸ்ஸி கோல் அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி வீரர்கள் போராடயும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனால் முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலித்திய சவுதி அரேபியா அணியின் சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இதனால் போட்டடியில் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு பின்னர் பதிலடி கொடுக்க அர்ஜென்டினா அணி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் முடிவில் 2-1 என சவுதி அரேபியா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Also Read: 22வது கால்ப்பந்து உலகக் கோப்பை: கத்தார் உருவாக்கியுள்ள புதிய மாற்றங்கள்!

Leave a Reply