FIFA WORLD CUP QATAR 2022: ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இங்கிலாந்து!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்ப்பந்து உலகக் கோப்பை 2022யின் இரண்டாவது போட்டி  இன்று மாலை கத்தார் நேரப்படி மாலை 4.00 மணிக்கு கலீபா சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

40 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்வையிடும் வகையில் அமைந்துள்ள இவ்விளையாட்டரங்கில் போட்டி ஆரம்பமானது முதல் இங்கிலாந்தின் ஆதிக்கம் தொடர்ந்ததை அவதானிக்க முடிந்து.

  • இப்போட்டியின் 35 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் முதலாவது கோலை இங்காலந்து அணிக்காக பெற்றுக்கொடுத்தார். .
  • 43 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் புகாயா சாகா அவ்வணியின் 2 ஆவது கோலை அடித்தார்.
  • 45 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் 3 ஆவது கோலை ரஹீம் ஸ்டேர்லிங் அடித்தார்.
  • இடைவேளையின் போது இங்கிலாந்து 3:0 விகிதத்தில் முன்னிலையில் இருந்தது.
  • அதன்பின் 62 ஆவது நிமிடத்தில் புகாகோ சாகா தனது இரண்டாவது கோலை அடித்தார். இது இங்கிலாந்தின் 4 ஆவது கோல் ஆகும்.
  • 65 நிமிடத்தில் ஈரான் அணி தனது முதலாவது கோலை பெற்றுக்கொண்டது. மெஹ்தி தொரேமி அந்த கோலை அடித்தார்.
  • எனினும், 71 ஆவது நிமிடத்தில் மார்கஸ் ரஷ்போர்ட் இங்கிலாந்தின் 5 ஆவது கோலை புகுத்தினார்.
  • 90 ஆவது நிமிடத்தில் ஜக் கிறேலிஸ் இங்கிலாநதின் 6 ஆவது கோலை புகுத்தினார்.
  • மேலதிக, உபாதை ஈடு நேர ஆட்டத்தில் பொனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஈரானிய வீரர் மெஹ்தி தொரேமி தனதும் தனது அணியினதும் இரண்டாது கோலை அடித்தார்.

ஆட்ட முடிவில் இங்கிலாந்து 6 கோல்களையும், ஈரான் 2 கோல்களை பெற்றுக்கொண்டன. மேலதிகமாக 4 கோல்களைப் பெற்ற இங்கிலாந்து போட்டியில் வெற்றி வாகை சூடியமை குறிப்பிடத்தக்கது.

Also Visit: FIFA கால்ப்பந்து உலகக் கோப்பை 2022! இன்றைய (நவம்பர் 21) தினம் 3 போட்டிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *