Qatar FIFA 2022

FIFA கால்ப்பந்து உலகக் கோப்பை 2022! இன்றைய (நவம்பர் 21) தினம் 3 போட்டிகள்!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதல்போட்டியாக இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஈரான் அணிகள் மோதுகின்றன. மகுடம் சூடும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டு உள்ள ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து கடந்த உலக கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறியது. முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து இன்றைய ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது போட்டி: இரவு 9.30 மணிக்கு நெதர்லாந்து-செனகல் அணிகள் மோதுகின்றன. தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் கைதேர்ந்த நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறதே தவிர கோப்பையை வென்றதில்லை. தனது கடைசி 15 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத நெதர்லாந்து அதே உத்வேகத்துடன் களம் காண காத்திருக்கிறது. டென்ஸில் டம்பிரைஸ், விர்ஜில் வான் டிஜ், கோடி கேக்போ, மெம்பிஸ் டிபே ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மூன்றாவது போட்டி:  நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதுகின்றன.64 ஆண்டுக்கு பிறகு உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி நட்சத்திர வீரரும், கேப்டனுமான காரெத் பாலே, துணை கேப்டன் ஆரோன் ராம்சியைத் தான் அதிகமாக நம்பி இருக்கிறது. இந்த ஆண்டில் 9 சர்வதேச போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் வேல்ஸ் அணி சரிவில் இருந்து எழுச்சி பெறும் முனைப்புடன் தயாராகி வருகிறது.

Also Read: FIFA WORLD CUP QATAR 2022: கத்தாரை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஈகுவடார்

Related Articles

Leave a Reply

Back to top button
%d