கத்தாரில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது (வீடியோ)

Qatar Police arrested Two Persons for car thefts

Qatar Police arrested Two Persons for car thefts

கத்தாரில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கார்களை திருடிய இருவரை குற்றப் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளதாக உள்துறை அமைச்சகம் (MoI) சமூக ஊடகங்கள் ஊடுாக அறிவித்துள்ளது.

நாட்டில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட பிரிவொன்று அமைக்கப்பட்ட பின்னர் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வாகனங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை உள்ளே பாதுகாப்பாக வைக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டிய MoI, சந்தேகத்திற்குரிய திருட்டு வழக்குகளை ஹெல்ப்லைன் 999 இல் தெரிவிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த கைது சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சு பின்வரும் வீடியோவை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply