Qatar NewsQatar Tamil News
செப்டம்பர் மாதத்துக்கான பெற்றோல் விலையை அதிகரித்தது கத்தார் அரசு!

September Fuel Price in Qatar
2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கான பெற்றோல் விலை இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக கத்தார் பெற்றோலியம் (QatarEnergy) அறிவித்துள்ளது.
அந்த ஆகஸ்ட் மாதத்தில் 1.90 ரியால்களாக விற்கப்பட்டு வந்த பிரீமியம் பெற்றோல் 05 திர்ஹங்கள் அதிகரிக்கப்பட்டு 1.95 ரியால்களாக விற்கப்படவுள்ளன.
மேலும், சுபர் பெற்றோல் மற்றும் டீசல் போன்றவை ஆகஸ்ட் மாத்தில் விற்கப்பட்ட விலைக்கே விற்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவித்தலை கத்தார் எரிசக்தி அமைச்சு உத்தியோக பூர்வ இணையத்திலும், சமூக வளைதளங்கள் மூலமாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாத எரிபொருள் விலை விபரங்கள்
- பிரீமியம் பெற்றோல் – 1.95 கத்தாரி ரியால்கள்
- சுபர் பெற்றோல் – 2.10 கத்தாரி ரியால்கள்
- டீசல் – 2.05 கத்தாரி ரியால்கள்
Also Visit: கத்தாரில் கார் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவர் கைது (வீடியோ)