கத்தார் முழுதும் கனத்த மழை! மழை நீரால் மூழ்கிய சாலைகள்! (வீடியோ)

Qatar Rain on 28.07.2022

கத்தாரில் இன்று (28.07.2022) கனத்த மழை பெய்துள்ளதாகவும், அதனால் கத்தாரின் பெரும்பாலான வீதிகள் மழை நீரினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மழையுடன் கூடிய காலநிலையானது எதிர்வரும் வார இறுதி நாட்கள் முழுதும் காணப்படும் என்பதாக கத்தார் வானிலை அவதான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.

மழையுடன் கூடியா காலநிலையின் காரணமாக வெப்ப நிலையும் வெகுவாக குறைந்துள்ளது.  குறைந்த பட்சமாக 28 பாகை வரையும், மற்றும் அதிகபட்சமாக 38 பாகை வரையும் வெப்ப நிலை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது மின்னல், மற்றும் இடி போன்றவை ஏற்படக் கூடிய சூழல் காணப்படுவதனால் பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக மரங்கள் மற்றும் மின்சார கம்பங்களின் அருகில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதைகளில் தேங்கி நின்ற மழைநீர் அதிகாரிகளால் தற்போது பவுசர் வாகனங்கள் மூலம் அகற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply