கத்தாரில் முதலாவது Monkeypox நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

First Monkeyfox Case Detected in Qatar

First Monkeyfox Case Detected in Qatar

கத்தாரில் முதலாவது Monkeypox நோயாளி அடையாளம் காணப்பட்டு்ள்ளதாக பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாடு ஒன்றிலிருந்து கத்தாருக்கு வந்த பயணி ஒருவரே இவ்வாறு மங்கி பொக்ஸ் (Monkeypox) நோயாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மேற்படி நபர் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு 21ம் நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

பொது மக்கள் இது தொடர்பாக விளிப்புடன் இருக்குமாறு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.  இது தொடர்பான முறைப்பாடுகளுக்கு 24 மணி நேரமும் 16000 என்ற எண்ணில் சுகாதாரத் துறையின் சுகாதாரத் துறையை அழைக்கலாம் என்பதாக கத்தார்  பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply