கத்தாரில் மீள அதிகரிக்கும் கொரோனா தொற்று! கடந்த 24 மணி நேரத்தில் 1217 புதிய தொற்றாளர்கள்!

Qatar MoPH Identifies More than 1,000 new Covid 19 cases in last 24 hours

Qatar MoPH Identifies More than 1000 new Covid 19 cases in last 24 hours

கத்தாரில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 1000க்கும் மேற்பட்ட கொரோனா கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தார் பொது சுகாதார அமைச்சின் 17ம் திகதிக்குரிய அறிக்கையின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1217 புதிய கொரோனா கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் 1017 பேர் பொது மக்களில் இருந்தும், 200 பேர் கத்தாருக்கு அண்மையில் பயணித்தவர்களில் இருந்தும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் சேர்த்து தற்போது கத்தாரில் 6,869 தொற்றாளர்கள் சிகிச்சையில் உள்ளதாகவம், இன்று 591 பேர் கொரோனா தொற்றியிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதாகவும் பொது சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Also Read: வெளிநாட்டவர்கள் தங்குவதற்கான சிறந்த நாடுகள் பட்டியல் 2022 – கத்தாருக்கு 26வது இடம்

Leave a Reply