2022ம் ஆண்டுக்கான சிறந்த விமானச் சேவை விருதைப் பெற்றது கத்தார் ஏர்வெய்ஸ்!

Qatar Airways wins top prize at 2022

Qatar Airways wins top prize at 2022 AirlineRatings

AIRLINERATINGS.COM இணைய தளத்தின் தரப்படுத்தலில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த விமானச் சேவையாக கத்தார் ஏர்வெய்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டுக்கான சிறந்த விமானச் சேவை, மத்திய கிழக்கிற்கான சிறந்த விமானச் சேவை, சிறந்த பிசினஸ் கிளாஸ் விமானச் சேவை வழங்குனர் போன்ற 3 விருதுகள் ஒரேயடியாக கத்தார் ஏர்வெய்ஸுக்கு கிடைத்துள்ளது.

மேற்படி விருதுகளானது,  தயாரிப்பு கண்டுபிடிப்புகள், வலுவான பாதை நெட்வொர்க் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு வழங்கப்படுகின்றன. அனைத்து ஏர்லைன் ரேட்டிங் விருதுகளும் விமானப் போக்குவரத்து துறையில் விரிவான நிபுணத்துவம் மற்றும் அனுபவமுள்ள தொழில் வல்லுநர்களால் ஒன்றிணைக்கப்பட்ட கடுமையான மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

இந்த விருதுகள் தொடர்பாக கத்தார் ஏர்வெய்ஸ் தலைமை அதிகாரி H E Akbar Al Baker அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, மேற்படி விருகளானது எமது கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். எமது வாடிக்கையாளர்களுக்கு உலக தரம் வாய்ந்த சேவைகளை வழங்க நாம் எப்போதும் ஆயத்தமாக உள்ளோம். கத்தார் ஏர்வெய்ஸ் விமானச் சேவையானது தற்போது 150க்கு மேற்பட்ட நகரங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவான பயணிகளுக்கு சேவைகளை வழங்க முடிகின்றது என்றார்.

Also Read: 2022ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள்! கத்தார் HIA முதல் இடம்பெற்று அசத்தல்!

Leave a Reply