2022ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள்! கத்தார் HIA முதல் இடம்பெற்று அசத்தல்!

HIA Best Airport of Year 2022

HIA Best Airport of Year 2022

2022ம் ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் கத்தாரின் ஹமத் சர்வதேச விமான நிலையம் முதல் இடம்பெற்று அசத்தியுள்ளது. விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் தொடர்பான தரப்படுத்தல்களில் உலகளவில் ஈடுபடும் SKYTRAX நிறுவனத்தினால் பிரான்சின் தலை நகர் பரிசில் நடைபெற்ற உலக விமான நிலைய விருது வழங்கும் நிகழ்வில் நேற்றைய (16.07.2022) தினம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கத்தாரின் விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்த்தைப் பெறுவது இது இரண்டாவது தொடர்ந்தேர்ச்சியான வருடமாகும். கடந்த 2021ம் ஆண்டு உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அடைவை எட்டியிருந்தது.

விமான நிலையத்திற்கு கிடைத்த விருது தொடர்பாக அதன் தலைமை அதிகாரி கருத்து தெரிவிக்கும் போது,
இரண்டாவது முறையாகவும் இந்த சிறந்த விமான நிலையம் என்ற மைல்கல்லை எட்டியமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது. நாங்கள் தொடர்ந்து நேர்த்தியான சேவையை வழங்க கடுமையாக உழைப்போம் என்றார்.

2022ம் ஆண்டுக்கான சிறந்த 20 விமான நிலையங்களின் பெயர்கள் வருமாறு!

 1. Hamad International Airport
 2. Tokyo International Airport (Haneda)
 3. Singapore Changi Airport
 4. Narita International Airport
 5. Incheon International Airport
 6. Paris Charles de Gaulle Airport
 7. Munich Airport
 8. Istanbul Airport
 9. Zurich Airport
 10. Kansai International Airport
 11. Helsinki-Vantaa Airport
 12. Central Japan International Airport
 13. London Heathrow Airport
 14. Dubai International Airport
 15. Amsterdam Schiphol Airport
 16. Madrid-Barajas Airport
 17. Copenhagen Airport
 18. Guangzhou Baiyun International Airport
 19. Vienna International Airport
 20. Hong Kong International Airport

Also Read: கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்தில் மோதவுள்ள 32 அணிகளும் இவைகள் தான்!

Leave a Reply