அரேபிய வளைகுடாவில் பாரிய நிலநடுக்கம், கத்தாரிலும் தாக்கம் உணரப்பட்டது

Earthquakes in eastern part of Arabian Gulf

அரேபிய வளைகுடாவில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதோடு, அதனது தாக்கம் கத்தாரிலும்  உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் (15.06.2022) அதிகாலை ஈரானை அண்டிய அரேபிய வளைகுடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் கத்தாரில் உணரப்பட்ட போதும், பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லையென்பதாக சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் கத்தார் நில அதிர்வு தகவல் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

அரேபிய வளைகுடாவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வானது  3.7 and 5.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. புவியியல் ரீதியாக, இந்த நிலநடுக்கங்கள் அரேபிய வளைகுடா பூமித் தட்டுக்கும் ஈரானிய பூமித் தட்டுக்கும் இடையிலான உராய்வின் காரணமாகவே ஏற்படுவதாக கத்தார் நில அதிர்வு தகவல் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இது போன்ற நில அதிர்வுகளைப் பொறுத்த வரையில்  கத்தாரில் பாரிய  சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதாக கத்தார் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தார் பீபா கால்ப்பந்து உலகக் கிண்ணத்தில் மோதவுள்ள 32 அணிகளும் இவைகள் தான்!

Leave a Reply