கத்தாரில் பணமோசடியில் ஈடுபட்டு வந்த ஏழு வெளிநாட்டவர்கள் கைது!

கத்தாரில் பணமோசடியில் ஈடுபட்டு 7 வெளிநாட்டவர்கள் உள்துறை அமைச்சின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏழ்வரும் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“ஆடம்பர கார்களை மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சுத்தப்படுத்த (வெள்ளை மணியாக்க) முயற்சித்த போது” ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவசியமான சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்ற பின்னர், நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி செய்யத் தயாராக இருந்த ஏழு வாகனங்களை MOI கைப்பற்றி, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி கைது தொடர்பாக உள்துறை அமைச்சினால் இணையத்தில்  பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Also Read: 2022ம் ஆண்டுக்கான சிறந்த விமானச் சேவை விருதைப் பெற்றது கத்தார் ஏர்வெய்ஸ்!

Leave a Reply