ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தடை நவம்பர் 15 முதல் செய்கிறது கத்தார்!

Qatar banned one time usage Plastic Bags

கத்தார்  ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் கத்தாரில் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் காலித் பின் கலீஃபா பின் அப்துல்அஜிஸ் அல் தானி தலைமையில் கடந்த 25.05.2022 அன்று நடைபெற்ற அச்சரவைக் கூட்டத்தில் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் யோசனைக்கு வழங்கப்பட்ட அனுமதியின் பதி எதிர்வரும் நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்படவுள்ளன.

இதன் படி, நிறுவனங்கள், ஷாப்பிங்க சென்டர்களில் வழங்கப்படும் ஒரு முறை மாத்திரம் பயன்படும் பிளாஸ்டிக் உறைகளுக்கு (சொப்பின் பேக்) தடை விதிக்கப்படவுள்ளது.

அதற்கு  பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக பல முறை பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பைகள், மக்கும் பிளாஸ்டிக் பைகள், காகிதம் அல்லது “நெய்யப்பட்ட” பைகள் மற்றும் பிற மக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Also Read: அமைதியான நாடுகள் பட்டியல், மத்திய கிழக்கில் கத்தாருக்கு முதல் இடம் : உலகளவில் 23ம் இடம்!

Leave a Reply