கத்தாரில் நாளை (ஜுன்-20) முதல் கடும் வெப்பம் – வானிலை ஆய்வு மையம் தகவல்

Hot Climate in Qatar on coming days

கத்தாரில் நாளை முதல் கடும் வெப்பமாக காணப்படும் என்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக திங்கட் கிழமை முதல் புதன்கிழமை வரையான காலப்பகுதியில் கத்தார் வெப்ப நிலையானது மிகக் கடுமையாக காணப்படும் என்பதாக டுவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் நாளாந்த வானிலை தொடர்பான அறிக்கைலேயே இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டோஹவின் வெப்ப நிலையானது 25 பாகை தொடக்கம் 51 பாகை வரையிலும், அல் ருவைஸ் நகரின் வெப்ப நிலையானது 26 பாகை தொடக்கம் 51 பாகை வரையிலும் அல் துகான் நகரின் வெப்ப நிலையானது 24 பாகை தொடக்கம் 50 பாகை வரையிலும் அபூ சம்ரா வின் வெப்ப நிலையானது 24 பாகை தொடக்கம் 50 பாகை வரையிலும் காணப்படும் என்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தாரின் கடும் வெப்ப நிலையைக் கருத்திற் கொண்டு வெளிக்கள பணியாளர்கள் காலை 10 முதல் மாலை 30.30 வரை பணியில் அமர்த்தப்படக் கூடாது என்பதாக உள்துறை அமைச்சு அறிவித்து, அது தற்போது அமூலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply