கத்தாரில் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் உள்துறை அமைச்சால் அறிவிப்பு!

3 Days Eid Holiday for Private Sector

கத்தாரில் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் உள்துறை அமைச்சால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் படி தனியார்த்துறை ஊழியர்கள் 3 நாட்கள் விடுமுறை தினங்களைப் பெற்றுக்கொள்ளவார்கள் என்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

நோன்புப் பெருநாள் விடுமுறை தொடர்பாக உள்துறை அமைச்சு தனது உத்தியோக பூர்த டுவிட்டர் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சம்பளத்துடன் கூடிய 3 நாட்களை (பெருநாள் + அடுத்த இரு தினங்கள்)  தனியார்த்துறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும் என தெரிவி்க்கப்பட்டுள்ளது.

என்றாலும், நிர்ப்பந்தத்தி்ன் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுபவர்கள், உரிய மேலதிக கொடுப்பனவுகள் (Over Time)  வழங்கப்படவேண்டும் என்பதாக தெளிவு படுத்தியுள்ளது. மேலும் உள்துறை அமைச்சானது கத்தாரிலுள்ள அனைவருக்கும் தனது உளப்பூர்வமான நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

இதையும் படிங்க: கத்தாரில் நோன்புப் பெருநாள் தொழுகை அதிகாலை 5.12க்கு நடைபெறும்!

Leave a Reply