கத்தாரில் இளஞ்சிவப்பு நிறமாக மாறிய நீர்நிலை (வீடியோ இணைப்பு)

Waterhole change into orange in Qatar

கத்தாரில் இளஞ்சிவப்பு நிறமாக நீர்நிலையொன்று மாறிய சம்பவம் பதிவாகியுள்ளது. கத்தாரின் சிமைஸ்மா (Simaisma ) பகுதியில் காணப்படும் நீர்நிலையொன்றே இவ்வாறு இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக டுவிட்டர் பதிவொன்றின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி டுவிட்டர் பதிவில், சிமைஸ்மா (Simaisma )பகுதியில் அமைந்துள்ள பெண்களுக்கான கடற்கரையை அண்டிய பகுதியில் காணப்படும் ஒரு நீர்நிலை இளஞ்சிவப்பு மாறியுள்ளதாக, கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சினை டெக் செய்து வீடியோவுடன் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த டுவிட்டர் பதிவிற்கு பதிலுளித்துள்ள சூற்றுச் சூழல் அமைச்சு, மேற்படி தகவலானது உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கத்தாரில் தற்போது நிலவும் உஷ்ணம் காரணமாக நீரில் உள்ள உப்புச் செறிவு அதிகரித்து இது போன்று குட்டைகளிலுள்ள நீரின் நிறங்கள் மாற்றும் பெறுகின்றன என்பதாக சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். என்றாலும், இது விஞ்ஞான ரீதியான இன்னும் நிரூபிக்கப்படவிலையென்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு நிறமான நீர்நிலை (VIDEO இணைப்பு)

Leave a Reply