கத்தார் வாழ் தனியார் துறை ஊழியர்களுக்கான பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல்!

கத்தார் வாழ் தனியார் துறை ஊழியர்களுக்கான பெருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய அறிவித்தல்!

தொழிலாளர் சட்டத்திற்கு உட்பட்டு தனியார் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஈத் அல் அழ்ஹா விடுமுறை மூன்று நாட்கள், முழு ஊதியத்துடன் வழங்கப்படவேண்டும் என்பதாக கத்தார் தொழிற்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.  அதன்படி ஹஜ்ஜுப் பெருநாள் முதல் தினம் ஆகிய ஜுன் 16ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை), ஏப்ரல் 17ம் திகதி(திங்கட்கிழமை) மற்றும் 18ம் திகதி ( செவ்வாய்க்கிழமை) விடுமுறை தினங்கள் வழங்கப்படவேண்டும்.

கட்டாய பணிச்சூழல் காரணமாக ஈத் விடுமுறையின் போது பணியமர்த்தப்பட வேண்டும் எனில், தொழிலாளர் சட்டத்தின் பிரிவு (74) இல் உள்ள மேலதிக கொடுப்பனவு (Over Time) தொடர்பான விதிகள் கருத்திற்கொள்ளப்படவேண்டும் என்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Also Read: கத்தாரில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை அதிகாலை 4.58க்கு நடைபெறும்!

Leave a Reply