கத்தாருக்குள் கடத்தப்படவிருந்த 3500 போதை மாத்திரைகள் அதிகாரிகளால் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட ஏராளமான போதை மாத்திரைகள் சரக்குக் கா்கோ விமானத்தில் இருந்த பிளாஸ்டிக் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (28.02.20222) வெளியான டுவிட்டர் செய்தியில் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய கார்கோ சுங்கப் பிரிவினரால் இப்பறிமுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு இன்னும் 3500 லிரிக்கா மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது போன்ற செயற்பாடுகளில் யாரும் ஈடுபடவேண்டாம் என்பதாகவும், மீறியும்  ஈடுபடுபவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதாக கத்தார் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கத்தாரிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் புதிய தொலைபேசி இலக்கம் தொடர்பான அறிவித்தல்

Leave a Reply